• Breaking News

    வவுனியாவில் இடம்பெற்ற சைவ தமிழ் இளைஞர் மாநாடு -முதலாம் நாள் நிகழ்வுகள்!!

    அகில இலங்கை சைவ மகாசபையால் மகா சிவராத்திரி நிகழ்வை முன்னிட்டு சைவத்தமிழ் இளைஞர் மாநாடு வவுனியா கோவிற்குளம் சிவன் கோவில் முதியோர் இல்லத்தில் நேற்று (06.03.2016) நடைபெற்றது.
    இவ் மாநாடானது வவுனியா வேப்பங்குளம் ஞானவைரவர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி நடைபவணியாக கோவிற்குளம்  அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தை சென்றடைந்து, காலை 10 மணிக்கு ஆரம்பமான சைவத் தமிழ் இளைஞர் மாநாட்டில் சைவ மகாசபை, சிவஞான சித்த பீடம் இறுவட்டு வெளீயீடும் நிகழ்வும் இடம்பெற்றது.
    இவ் மாநாட்டில் பிரதம விருந்தினராக சிவத்திரு.சீ.யோகேஸ்வரன் (மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கிழங்கை இந்து இளைஞர் பேரவைத் தலைவரும்), கௌரவ விருந்தினராக திருமிகு.நா.குமரகுருபரன் (அமைப்பாளர் சர்வதேச இந்து இளைஞர் சங்கம்) மற்றும் சிவத்திரு நவரட்ணராஜா (தர்மகத்தா கோவிற்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயம்), மத குருமார்கள், அறநெறி மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.











    No comments

    Post Bottom Ad