• Breaking News

    வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!(படத்தொகுப்பு, காணொளி)

    வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் நேற்று11.06.2016 சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
    பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 10 மணியளவில் வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடைந்தன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    மேலும் இரவு பூஜைகள் சிறப்பாக இடம்பெற்று அலங்கரிக்கபட்ட  முத்து சப்பரத்தில்  ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர்  வீதியுலா வந்து பொங்கல் வைபவமும் இடம்பெற்றது .

    9 மணியளவில் ஆரம்பமான இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் மற்றும் இலங்கையின் முன்னணி இசைக் குழுவான சிவகுமாரின் அக்கினி இசைக் குழுவின் இன்னிசை நிகழ்வு என்பன அதிகாலை 5 மணிவரை நடைபெற்றது.

    இந்நிகழ்வுகள் அனைத்தையும் வவுனியா நெற் இணையம் முழுமையாக நேரடி HD மற்றும் டிஜிட்டல் தொழிநுட்பத்துடன் ஓளிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

    பகல் நிகழ்வுகள் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரையும் இரவு நேர நிகழ்வுகள் 9 மணிமுதல் அதிகாலை 5 மணிவரையும் மிகச் சிறப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    வெளிநாட்டில் வாழும் வவுனியா வாழ் உறவுகளை ஒன்றிணைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நேரடி ஒளிபரப்புச் சேவையினை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.





























    No comments

    Post Bottom Ad