வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தேர் திருவிழா!! (படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத
அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை(08/04//2017)
இடம்பெற்றது.அதிகாலை
ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு
மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு நாற்பந்தைந்து மணிக்கு தம்ப பூஜை
இடம்பெற்றது. தொடர்ந்து கலை எட்டு மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி
ஒன்பதுமணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத
முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து ஒன்பது
மணியளவில் தேரில் ஆரோகணிக்கும் நிகழ்வு
இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்திலேயே மிக பெரிய சிவன்கோவிலான வவுனியா
கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த
தேர்பவனி காலை ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகி இருப்புக்கு கலை பதினோரு
மணியளவில் வந்து சேர்ந்தது.
மேற்படி உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து
இருந்தனர். தேர் இருப்பிடத்தை அடைந்தபின் அர்ச்சனைகள்
இடம்பெற்று பிற்பகல் ஒன்றரை மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது .தொடர்ந்து
மூன்றுமணியளவில் பிராயசித்த அபிசேகமும் மாலை ஐந்து மணிக்கு வசந்தமண்டப பூஜையும் தேரடி பார்க்கும் நிகழ்வும்
இடம்பெற்றது.
















































































































































































































































































































































