வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய தைபொங்கல் விழா -2018
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தில் நேற்று 14.01.2018 ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணி முதல் பொங்கல் விழா இடம்பெற்றது .
முற்றிலும் பாரம்பரிய முறைப்படி கோவில் வயலில் நெல்லை அறுவடை செய்து நெற்கதிர் ஊர்வலமாக மாட்டு வண்டியில் எடுத்துவரப்பட்டு ஆலய முன்றலில் பாரம்பரிய முறையில் குத்தி அரிசி ஆக்கப்பட்டு கண்ணகை அம்மனுக்கு விசேட பொங்கல் நிகழ்வு இடம்பெற்றதுடன் கண்ணகை அம்பாளுக்கு விசேட விசேட பூஜை நிகழ்வுகள் இடம்பெறு வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் கலை நிகழ்ச்சிகளும்,சிறப்பு நடனம் ,சிறப்பு மேள கச்சேரி , உறிஉடைத்தல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மேற்படி நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் மற்றும் வவுனியா பிரதேச செயலர் ஆகியோரும் கலந்து கொண்டனர் .