• Breaking News

    வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய அலங்கார நுழைவாயில் திறப்பு மற்றும் அன்னதான மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு!

    நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த புதூர் நாகதம்பிரான் ஆலய அலங்கார நுழைவாயில் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்றுமுன்தினம் (10.06) ஆலய தலைவர் இ.பூலோகசிங்கத்தின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
    வல்லிபுரம் அன்னபூரனத்தின் நினைவாக ஏ9 வீதி புதூர் சந்தியில் அமைக்கப்பட்டு ஆலய அமைவிடத்தையும், அதற்கான வழியையும் காட்டி நின்று வருவோரை வரவேற்கும் அலங்கார நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    இதனைத் தொடர்ந்து நுழைவாயில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா, ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் ச.தணிகாசலம் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
     தொடர்ந்து அன்னதான மடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இடம்பெற்றது. இதில் மாண்புமிகு வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தனது கரங்களினால் அடிக்கல்லினை நாட்டி வைத்தார். தொடர்ந்து கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், வைத்தியர்கள், ஆலய பரிபாலனசபையினர், அடியார்கள் என தொடர்ந்து எம்பெருமானுக்காக அன்னதான மடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்.










































    Post Bottom Ad