• Breaking News

    வவுனியாவில் நள்ளிரவில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த நாகதம்பிரான்!(படங்கள்,வீடியோ)


    வவுனியா புதூர்  ஸ்ரீ நாகதம்பிரான்  ஆலய  வருடாந்த பொங்கல் பெருவிழா  நேற்று 11.06.2018   திங்கட்கிழமை  இடம்பெற்றது.  மேற்படி பொங்கல்  விழாவின் போதே  நாகதம்பிரான்  பக்தர்களுக்கு காட்சி கொடுத்த சம்பவமும் இடம்பெற்றது.  நேற்று  பல லட்சக்கணக்கான பகதர்கள்  கூடியிருந்த  தருணம்  வழிபாடுகள் இடம்பெற்று கொண்டிருந்த சமயம்  நாகதம்பிரான்  பக்தர்களுக்கு காட்சி  கொடுத்துள்ளார் .
    மேற்படி  சம்பவம்  தொடர்பாக  அன்பர் ஒருவர்  முகபுத்ததில்  பகிர்ந்த விடயம்
    மனிதனுக்கு மிஞ்சிய சக்தி உண்டென்பதை ஏற்கும் மனம். அதுதான் கடவுள் என்று ஏற்க மறுக்கிறதும் முன்னுக்கு பின் முறனான கடவுளர்களின் பிறப்பு பற்றி மொழிவதும் மனிதப் பண்புகளோடு பிறப்பவர்களை கடவுளாக கொண்டு கதைகள் பல சொல்வதுமாக கேட்டு கடவுளை நம்ப மறுக்கிறது மனம்.
    எல்லோரும் போல கோவிலுக்கோ, பள்ளிக்கோ, தேவாலயங்களுக்கோ சென்றாலும் கடவுளை பற்றிய தேடல் தொடர்கிறது என்னுள்.
    #புதூர் #நாகம்பிரான் ஆலயவழிபாடு 11-06-2018 நேற்று சென்றிருந்தேன். வழமைப்போல கோவில் நுழைவாயில் போனதும் கையை கழுவிட்டு நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை முடித்துக்கொண்டு கோவிலின் செல்லும் போது ஒலி பெருக்கியில்
    " நாகம்பிரான் காட்சியளிக்கிறார் சனநெரிசல் அதிகமாகி கொண்டிருக்கிறது சீராக்க காவல்துறையிர் உள்வீதிக்கு வரவும் " என்றனர்.
    எனக்கு ஒரே மகிழ்ச்சி அப்போ கடவுளை பார்த்து விடலாம் என்று முட்டி மோதி உள்ளே சென்றேன். உள்ளே உள்ள பாலை மரத்தைச் சுற்றி கூடியிருந்த சனங்கள் மரத்தின் உச்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    ருசிலர் அதோ என்றார்கள் அதில் கொஞ்சப்பேர் அது மரக்கட்டை என்றார்கள். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. சிரித்து முடிக்குமுன்னே " இதோ இதோ என்று பலரும் கூச்சலிட்டனர். ஒருசிலர் தன்னை மறந்து ஆடத்தொடங்கினர். "அரோகொரா...அரோகொரா.." என்று சத்தம் வேறு திரும்பி பார்த்தேன் வெள்ளை நிற நாகபாம்பு படமெடுத்தவாறு. உடம்பே வியர்த்துவிட்டது.
    என்னை அறியாமலே கையெடுத்து வணங்கிவிட்டு புகைப்படம் எடுப்போம் என்று தொலைபேசியை எடுத்தேன். உள்ளே போய்விட்டது. வாலை மட்டுமே படம் பிடிக்கமுடிந்தது.







    Post Bottom Ad