• Breaking News

    வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலய சித்திரை தேர்த்திருவிழா!! (படங்கள்,காணொளி)

    வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா சித்திரை புத்தாண்டான  14.04.2019 ஞாயிற்றுக்கிழமை காலை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இரகுநாத கமலேஸ்வர  குருக்கள் தலைமையில்  இடம்பெற்றது.

     அதிகாலை ஐந்து மணிமுதல் கிரியைகள் ஆரம்பமாகி காலை ஏழரை கொடிதம்ப பூசையை தொடர்ந்து  எட்டரை மணியளவில் வசந்தமண்டபபூஜை நிறைவு பெற்று பஞ்சமுக விநாயகப்பெருமான் தேருக்கு எழுந்தருளினார்.

     தொடர்ந்து  நூற்றுக்கணக்கான தேங்காய்கள் உடைக்கபட்டு காலை 9.15  மணியளவில் அடியவர்கள் வடம்பிடிக்க அரகரோகரா  முழக்கத்துடன் எம்பெருமானது தேர் இழுக்கபட்டு பக்தர்கள் புடைசூழ திருவீதி வலம்வந்து 10.15 மணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தார்.


























    Post Bottom Ad