• Breaking News

    வவுனியா - கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேசவரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் பாலஸ்தாபன மகாகும்பாபிஷேகம் – 2019




    இலங்காதீவின் வடபால் பல வளங்களாலும் சிறப்புப் பெற்ற வவுனியா நகரத்தின் கண்ணே ஈழத்தின் ஆறாவது ஈஸ்வர தலமாக போற்றுவதற்கு பெருமை வாய்ந்ததும், காஞ்சி காமகோடி பீட குருவருள் பொருந்தியதுமான கோவில்க்குளம் திவ்வியஷேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை ஈந்தருளும் அருள்மிகு அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம் செய்த பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவு செய்யும் தருணத்தில் வேதாகம முறைப்படி பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்ய திருவருளும் குருவருளும் கூடியுள்ளது.

    மேற்படி ஆலயத்தின் பாலஸ்தான  பூர்வாங்க கிரியைகள் 13.06.2019 வியாழக்கிழமையும்  பாலஸ்தான கும்பாபிசேகம் 14.06.2019  வெள்ளிக்கிழமையும் இடம்பெறுகின்றது.
    பிரதமகுரு
    "சாகித்திய சிரோன்மணி, நயினை குருமணி
    சிவஸ்ரீ. வை. மு.ப.முத்துக்குமாரசாமி குருக்கள்
    ஆதீன பிரதமகுரு, ஸ்ரீ நாகபூஷணி அம்மன்கோவில், நயினாதீவு - வடகோவை


    பிரதிஷ்டா பிரதம குருமணிகள்

    " வேதாகம கிரியா கலாநிதி
    சக்தி உபாசகர்
    சிவஸ்ரீ. சதா சங்கரதாஸ் குருக்கள்
    சிவஸ்ரீ ச. விவேந் குருக்கள்
     ஆலய பிரதம குருமணிகள்: குறிகட்டுவான் ஸ்ரீ மனோண்மணி அம்மன் ஆலயம்
    பண்டாரிகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்.

    Post Bottom Ad