Friday, May 16.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் தேர்த் திருவிழா!

 வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த செவ்வாய் கிழமை (04/04//2023) இடம்பெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு சிவஸ்ரீ ரஞ்சித் செல்வானந்த குருக்கள்(ஆலய பிரதம குரு) தலைமையில் அபிசேகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜை காலை 7.00 மணியளவில் இடம்பெற்று மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை 7.45 மணிக்கு தம்ப பூஜையும் இடம்பெற்றன. தொடர்ந்து காலை 9.00 மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி 8.30 மணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர், விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து 10.00 மணியளவில் தேரில் ஆரோகணிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சிவாலயமாக விளங்கும் வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர்பவனி காலை 10.30மணிக்கு ஆரம்பமாகி இருப்புக்கு காலை 11.30 மணியளவில் வந்து சேர்ந்தது. மேற்படி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். தேர் இருப்பிடத்தை அடைந்தபின் அர்ச்சனைகள் இடம்பெற்று பிற்பகல் 2.00 மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றதுடன் .தொடர்ந்து 2.30 மணியளவில் பிராயசித்த அபிசேகமும் இடம்பெற்றது.


339166415_1690003218080888_5833035063522437222_n

339168888_1641086362978031_1589197676368931816_n

339281548_757669102410888_4772691192118264780_n

339293736_601884371814902_4466181579437300079_n

339308990_2357340101102413_4732983005997902852_n

339320435_751253299823142_7117844443115760193_n

339339673_543236984500528_8491456292831229319_n

339463336_600877935251734_6624253881546582517_n

339739738_236486052200021_2716941043218786360_n

339749468_170842148779206_3761645107217428153_n

339766331_782156776380523_2397136079850197661_n

339772474_660912669136571_7557568618816678779_n

339791835_735642301431341_7142241076750048321_n

339793141_896196874821826_8503955230348419838_n

339797928_166309289674092_8958079747989536942_n

339800051_180732431434713_7533796263407688715_n

339800188_758819785627301_1018109340931901983_n

339805676_1270685043826700_3139400568197223512_n

339814668_738884467936362_2094382065318315782_n

339823852_235746515692102_6023766931055835328_n

339823902_1859649081056997_1065461125877327166_n

339826660_980096893400463_7763847206349137612_n

339827160_226200380073039_1569390153911722171_n

339827183_1433221610415584_4282276244040853475_n

339874015_221314233920731_7298517276238449485_n

339913323_587781166632195_858073188368708161_n

339920182_551893337088582_7457468652779073705_n

339933130_795685835159350_6348015416806052148_n


No comments

Post Bottom Ad