துர்முகி வருடப்பிறப்பின் சுப நேரங்கள் !!!
எதிா் வரும் 13.04.2016 புதன் கிழமை (பங்குனி 31) அன்று மாலை 6.36 மணிக்கு பூா்வபக்க ஸப்தமி திதியில், திருவாதிரை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில், துலா லக்கினத்தில், விருச்சிக நவாம்சத்தில் "துா்முகி" வருடம் பிறக்கின்றது.
- விஷ புண்ணிய காலம் (மருத்து நீா் வைத்து நீராடும் நேரம்) அன்று மாலை 2.36 தொடக்கம் இரவு 10.36 வரை.
- அணியவேண்டிய ஆடையின் நிறம் வெள்ளை மற்றும் பச்சை.
- கைவிஷேட நேரம் *16.04.2016 (சனி) இரவு 10.38 - 12.23 *17.04.2016 (ஞாயிறு) அதிகாலை 2.35 - 4.04 *18.04.2016 (திங்கள்) காலை 9.07 - 9.35 பகல் 9.47 - 11.46 மாலை 6.05 - 7.25 இரவு 10.19 - 12.15 வரை.
சங்கிரம தோஷ நட்சத்திரங்கள் மிருகசீாிடம், திருவாதிரை, புநா்பூசம், சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, சதயம். இந்த நட்சத்திரங்களில் பிறந்தோா் தவறாது மருத்து நீா் வைத்து நீராட வேண்டும். பிறக்கின்ற புதுவருடம் முருகப்பெருமானின் அருளாசியுடன், அணைவருக்கும் சிறந்த வருடமாக அமையட்டும்.
No comments