• Breaking News

    வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய கொடியேற்றம்!!

    நரசிங்க பெருமானுக்கு நிகழும் சர்வ மங்களங்களும் நிறைந்த ஏவிளம்பி வருடம் ஆவணி மாதம் 09ம் நாள் (25.08.2017) வெள்ளிக்கிழமை சதுர்த்தித் திதியும் அத்த நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
    இன்றய கொடியேற்றத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    மேலும் ஆவணி திங்கள் 17ம் நாள் (02.09.2017) சனிக்கிழமை தேர்த்திருவிழாவும், 03.09.2017 ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக தினமாகிய திருவோண நட்சத்திரத்தில் நவோத்திர சஹஸ்ர சங்காபிஷேகமும் தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்க வைபவமும் நடைபெறும்.
    பக்த அடியார்கள் அனைவரும் வருகை தந்து நரசிங்கப் பெருமானின் திருவருள் பெற்றுய்யுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
















    Post Bottom Ad