• Breaking News

    வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூர சம்ஹார நிகழ்வு-2020

     இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் இறுதி நாளான 20.11.2020 அன்று வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

    மும்மலப் பிடியிலிருந்து விடுதலை பெற்று முத்தியின்பத்தை அடைதலே ஆன்மாக்களுக்கு வகுக்கப்பட்ட இலக்கு. அசுரகுணங்களை அழித்து நன்னிலை அடைதலை குறியிட்டு நிற்கும் நிகழ்வாக சூரன் போர் விளங்குகிறது.

    இந்துக்களின் முதன்மையான விரதங்களில் ஒன்றாகிய கந்த சட்டி விரத்தின் இறுதிநாளில் சட்டித் திதி கூடி நிற்கும் மாலைப் பொழுதில் சூரன் போர் இடம்பெறுவது வழமை.  அந்தவகையில் அந்தணச் சிவாச்சாரியார்கள் புடைசூழ ,மங்கள வாத்தியங்கள் முழங்க வவுனியா ஸ்ரீ  கந்தசாமி ஆலயத்தில் சூர சம்ஹார நிகழ்வு இடம்பெற்றது. 

    இதன்போது, சுகாதார விதிமுறைகளுடனும், குறைந்தளவிலான பக்தர்களுடனும் ஆலய வளாகத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் சூரர்களுடன் போர் செய்து அவர்களை வதம் செய்து, அடியார்களுக்கு அருள்பாலித்தார். 



































    No comments

    Post Bottom Ad